Language selector

Social Media Links FR


Facebook CODP Twitter CODP Instagram logo Link to OHRC Instagram page

Rechercher

Résultats de la recherche

  1. வலுவிழப்பும் (Disability) மனித உரிமைகளும்

    2011 - ஒன்ராறியோவின் மனித உரிமைகள் விதி (The Ontario Human Rights Code) சம உரிமைகளையும் வாய்ப்புக்களையும் அளிப்பதுடன் பாகுபாட்டில் இருந்து சுதந்திரமும் அளிக்கிறது. இந்தச் சட்டவிதி ஒன்ராறியோவில் உள்ள ஒவ்வொருவரினதும் கெளரவத்தையும் பெறுமதியையும் அங்கீகரிக்கிறது. இது வேலைவாய்ப்பு, குடியிருப்பு, வசதிகளும் சேவைகளும், தொழிற்சங்க ஒப்பந்தங்களும் அங்கத்துவமும், வணிகம் அல்லது வாழ்க்கைத் தொழில்சார்ந்த அமைப்புக்கள் போன்ற துறைகளுக்கும் பொருந்தும். வேலையில், வலுவிழந்த வேலையாளர்கள், வலுவிழப்பு இல்லாத (without disability) வேலையாட்களுக்குள்ள அதே வாய்ப்புக்களுக்கும் நன்மைகளுக்கும் உரித்துடையவர்கள் ஆவார்கள். சில நிலைமைகளில் அவர்களுடைய வேலைக் கடமைகளைச் செய்வதற்கு அவர்களுக்கு விசேட ஒழுங்குகளோ அல்லது இடவசதிகளோ தேவைப்படலாம்

  2. வயதுப் பாகுபாடு

    2012 - ஒன்ராறியோ மனித உரிமைகள் சட்டக் கோவை ( Ontario Human Rights Code) ,வயதின் அடிப்படையிலான பாகுபாட்டிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறது. இந்தச் சட்டக்கோவை வயதை, 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டது என வரைவிலக்கணப்படுத்துகிறது. எனினும் தமது பெற்றோருடன் வசிக்காதவிடத்தில் 16 வயதினரும்அதற்கு மேற்பட்டோரும் கூட, குடியிருப்பு வசதிகளில் பாகுபடுத்தப்படாமல் பாதுகாக்கப்படுகின்றனர். இதன் கருத்து, சேவைகளை அளிக்கும் போது உங்களுடைய வயது, நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள், அல்லது வசிக்கிறீர்கள் என்பனவற்றுக்கு எதிராக உங்களை மக்கள் பாகுபடுத்த முடியாது.

  3. மனித உரிமைகளும் குடும்பநிலையும்

    2012 - ஒன்ராறியோ மனித உரிமைகள் சட்டக்கோவை (The Ontario Human Rights Code ) சம உரிமைகளையும் வாய்ப்புக்களையும் வழங்குவதுடன் வேறுபட்ட அடிப்படைகளில் பாகுபாடு நடக்காமல் சுதந்திரமும் அளிக்கிறது. இந்தச் சட்டவிதி வேலைவாய்ப்பு, குடியிருப்பு வசதி, வாய்ப்புக்களும் சேவைகளும், தொழிற்சங்க ஒப்பந்தங்களும் அங்கத்துவமும், வணிகம் அல்லது வாழ்க்கைத் தொழில்சார்ந்த அமைப்புக்கள் போன்ற துறைகளில் உள்ள ஒன்ராறியோவில் உள்ள ஒவ்வொருவரினதும் கெளரவத்தையும் பெறுமதியையும் அங்கீகரிக்கிறது. இந்தச் சட்டக்கோவை, உங்களுடைய குடும்பநிலையின் அடிப்படையில் மேற்கூறப்பட்ட துறைகளில் பாகுபாடு நிகழாமல் உங்களைப் பாதுகாக்கின்றது.

  4. பாலியல், பாலின அடிப்படையிலான தொந்தரவு: உங்கள் உரிமைகளை அறியுங்கள்

    2012 - பாலியல், பாலின அடிப்படையிலான தொந்தரவு என்பன பாகுபாட்டின் வகைகளாகும். அவை ஒருவரது கௌரவத்தைப் பாதிக்கலாம், பாதுகாப்பற்றவர்களாக அவர்களை உணரச் செய்யலாம், தமது முழு உள்ளார்ந்த ஆற்றலை எய்துவதிலிருந்து அவர்களைத் தடுக்கலாம். பால், பாலினம் அல்லது பாலியல் போக்கு என்பன காரணமாக ஒருவருக்குப் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தல் அல்லது அடாவடித்தனம் செய்தல் ஏற்புடையதல்ல. இது சட்ட விரோதமானது.

  5. பாலியல் போக்கும் மனித உரிமைகளும்

    2012 - “பாலியல் போக்கு” என்பது ஒரு தனியாளின் சிறப்பியல்பாகும், அது நீங்கள் யார் என்பதன் ஒரு பகுதியை உருவாக்குகிறது. அது ஒரினச்சேர்க்கைப் பெண்களும் ஒரினச்சேர்க்கை ஆண்களும் முதல் இருபாலினமும் வேற்றுப்பால் கவர்ச்சியும் வரையுள்ள மனித பாலின்ப ஆர்வத்தின் வேறுபாட்டு எல்லைகளை உள்ளடக்குகிறது.

  6. பாலின அடையாளம்

    2012 - ஒன்ராறியோ மனித உரிமைகள் சட்டக்கோவை (The Ontario Human Rights Code ) சம உரிமைகளையும் வாய்ப்புக்களையும் வழங்குவதுடன் பாகுபாட்டிலிருந்தும் சுதந்திரம் அளிக்கிறது. இது ஒன்ராறியோவில் உள்ள வேலைவாய்ப்பு, சேவைகளும் வசதிகளும், விசேட இடவசதியும் குடியிருப்பும், தொழிற்சங்க ஒப்பந்தங்களும் அங்கத்துவமும், வர்த்தக அல்லது தொழில் வல்லுனர் அமைப்புக்கள் போன்றவற்றில் உள்ள ஒவ்வொருவரினதும் கெளரவத்தையும் பெறுமதியையும் அங்கீகரிக்கிறது. பாலின அடையாளத்துக்கு எதிராக பாகுபடுத்தப்படும் அல்லது தொந்தரவு படுத்தப்படும் மக்கள் “பால் வேறுபாடு” என்ற அடிப்படையின் கீழ் சட்டப்படி பாதுகாக்கப்படுகின்றனர். பாலின அடையாளம் அல்லது வெளிப்பாடு மாற்றுப்பாலியலாளர் (transsexual) மாற்றுப்பாலினத்தவர் (transgender), இருபாலியலாளர்கள் (intersex persons), மாற்றுப்பாலின உடையாளர்கள் (cross-dressers), பிறப்பால் அடையாளப்படுத்தப்பட்ட பாலிலிருந்து வேறுபட்டும் அல்லது வேறுபட்டதாக காணப்பட்டும் இருக்கும் ஏனையோர் போன்ற அனைவரையும் இது உள்ளடக்கும்.

  7. கர்ப்பமும் தாய்ப் பாலூட்டலும்

    2012 - ஒன்ராறியோ மனித உரிமைகள் சட்டக்கோவை (Ontario Human Rights Code ), ஒன்ராறியோவில் உள்ள ஒவ்வொருவரினதும் கெளரவத்தையும் பெறுமதியையும் அங்கீகரிப்பதுடன் அவர்களுக்கு சம உரிமைகளையும் வாய்ப்புக்களையும் வழங்குகின்ற ஒரு சட்டமாகும். கர்ப்பம், தாய்ப்பாலூட்டல் உட்பட பால் வேறுபாடு காரணமாக ஒருவருக்கு பாரபட்சம் காட்டுவதை அல்லது அவர்களுக்கு உபத்திரவம் கொடுப்பதை இந்தச் சட்டக்கோவை சட்டத்துக்கு எதிரானதாக்குகிறது.

  8. இனரீதியான தொந்தரவு – உங்களுடைய உரிமையை அறிந்துகொள்ளுங்கள்

    2012 - இனரீதியான தொந்தரவு, மேலேயுள்ள ஏதாவது சிறப்பியல்புகளின் சேர்க்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம். அவற்றுடன் தொடர்பான விடயங்களான, உங்களுடைய பூர்வீகத்துடன் தொடர்பாக நீங்கள் அணியும் ஆடைகள், அசையழுத்தத்துடன் பேசல், குறிப்பிட்ட சமயத்தைப் பின்பற்றல் போன்றவற்றைப் பொறுத்தும் இது இருக்கலாம். அந்த ஏதாவது காரணங்களுக்காக யாராவது உங்களைத் துன்புறுத்தினால் அல்லது அவமதித்தால் அல்லது உங்களை நியாயமற்ற விதத்தில் நடத்தினால் அது சட்டத்துக்கு எதிரானது ஆகும்.

  9. இனப் பாகுபாடு

    2012 - ஒன்ராறியோ மனித உரிமைகள் சட்டக் கோவை (The Ontario Human Rights Code ) சம உரிமைகளையும் வாய்ப்புக்களையும் வழங்குவதுடன் பாகுபாட்டிலிருந்தும் சுதந்திரம் அளிக்கிறது. ஒன்ராறியோவில் உள்ள ஒவ்வொருவரினதும் கெளரவத்தையும் பெறுமதியையும் அங்கீகரிக்கிறது. இது வேலைவாய்ப்பு, குடியிருப்பு வசதி, வாய்ப்புக்களும் சேவைகளும், தொழிற்சங்க ஒப்பந்தங்களும் அங்கத்துவமும், வணிகம் அல்லது வாழ்க்கைத் தொழில்சார்ந்த அமைப்புக்கள் போன்ற துறைகளுக்கு பொருந்தும். இந்த சட்டக்கோவையின் படி இனப்பாகுப்பாட்டிலிருந்தும் உபத்திரவத்திலிலிருந்தும் விலகியிருக்க ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

  10. ਲਿੰਗੀ ਪਛਾਣ

    2012 - ਓਨਟੈਰੀਓ ਮਨੁੱਖੀ ਹੱਕਾਂ ਦੀ ਨਿਯਮਾਵਲੀ (ਨਿਯਮਾਵਲੀ) ਬਰਾਬਰ ਹੱਕ ਅਤੇ ਮੌਕੇ, ਅਤੇ ਵਿਤਕਰੇ ਤੋਂ ਆਜ਼ਾਦੀ ਮੁਹੱਈਆ ਕਰਦੀ ਹੈ। ਇਹ ਨਿਯਮਾਵਲੀ ਓਨਟੈਰੀਓ ਵਿੱਚ, ਰੁਜ਼ਗਾਰ, ਰਿਹਾਇਸ਼, ਸਹੂਲਤਾਂ ਅਤੇ ਸੇਵਾਵਾਂ, ਇਕਰਾਰਨਾਮਿਆਂ, ਅਤੇ ਯੂਨਿਅਨਾਂ ਵਿੱਚ ਮੈਂਬਰਸ਼ਿਪਾਂ, ਵਪਾਰਕ ਜਾਂ ਪੇਸ਼ਾਵਰ ਐਸੋਸਿਏਸ਼ਨਾਂ ਵਿੱਚ ਹਰੇਕ ਵਿਅਕਤੀ ਦੇ ਸਨਮਾਨ ਅਤੇ ਮੁੱਲ ਨੂੰ ਪਛਾਣਦੀ ਹੈ। ਜਿਨ੍ਹਾਂ ਲੋਕਾਂ ਨਾਲ ਲਿੰਗੀ ਪਛਾਣ ਦੇ ਅਧਾਰ ਤੇ ਵਿਤਕਰਾ ਕੀਤਾ ਜਾਂਦਾ ਹੈ ਜਾਂ ਪਰੇਸ਼ਾਨ ਕਿਤਾ ਜਾਂਦਾ ਹੈ ਉਹ ਲਿੰਗ ਦੇ ਅਧਾਰ ਦੇ ਤਹਿਤ ਕਾਨੂੰਨੀ ਤੌਰ ਤੇ ਸੁਰੱਖਿਅਤ ਹਨ। ਇਸ ਵਿੱਚ ਟ੍ਰਾਂਸਸੈਕਸੁਅਲ, ਟ੍ਰਾਂਸਜੈਂਡਰ ਅਤੇ ਅੰਤਰਲਿੰਗੀ ਵਿਅਕਤੀ; ਦੂਜੇ ਲਿੰਗ ਦੇ ਕੱਪੜੇ ਪਾਉਣ ਵਾਲੇ ਵਿਅਕਤੀ, ਅਤੇ ਹੋਰ ਵਿਅਕਤੀ ਸ਼ਾਮਲ ਹਨ ਜਿਨ੍ਹਾਂ ਦੀ ਲਿੰਗੀ ਪਛਾਣ ਜਾਂ ਅਭਿਵਿਅਕਤੀ ਉਹਨਾਂ ਦੇ ਜਨਮ ਤੋਂ ਪਛਾਣੇ ਗਏ ਲਿੰਗ ਤੋਂ ਵੱਖਰੀ ਹੁੰਦੀ ਹੈ, ਜਾਂ ਦੇਖੀ ਜਾਂਦੀ ਹੈ।

Pages